அவுஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கர காட்டுத்தீ எச்சரிக்கை

மீண்டும் சூடான வெப்பநிலை திரும்பியிருக்கும் நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் விக்டோரியா மாநிலத்தில் ஆபத்தான பகுதிகளில் இருந்து வெளியேறும் எச்சரிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் மக்களும் மோசமான காலநிலைக்கு முகம்கொடுக்க தயாராகும்படி நிர்வாகம் எச்சரித்துள்ளது.  

“இந்தத் தீ சம்பவங்கள் இன்னும் நகர்ந்து வருகின்றன எமது நிலங்களில் தொடர்ந்தும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது” என்று விக்டோரிய அவசர சேவை அமைச்சர் லிசா நெவில்லே தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்தார். 

தென் கொரிய நாட்டின் அளவான 10.3மில்லியன் ஹெக்டயர்களுக்கு அதிகமான நிலப்பரப்பை அழித்திருக்கும் இந்த பயங்கர காட்டுத் தீயினால் இதுவரை 26பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்திருப்பதோடு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மூன்று ஆண்டு வறட்சிக்கு மத்தியில் வலுவான காற்று மற்றும் சூடான வெப்பநிலை கோடைகால காட்டுத் தீயை மோசமடையச் செய்துள்ளது. நாட்டில் சிறிய அளவில் மழை பெய்தபோதும் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பவில்லை.  

இந்நிலையில் இன்றைய தினம் கடும் சூடான மற்றும் சீதோஷ்ன காலநிலை ஒன்று இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.  

இதனையொட்டி மாநிலத்தின் காட்டுத் தீ தீவிரம் அடைந்திருக்கும் கிழக்கு கிப்ஸ்லாண்ட் உட்பட அல்பினே மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இருந்து மக்களை அவசரமாக வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  

மழையில்லாத கோடை இடிமின்னர் மற்றும் அபாயகரமாக காற்றுடன் வெப்பநிலை 41 செல்சியஸ் அளவு உயரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.    

Fri, 01/10/2020 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை