வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் உடனான போர் பதற்றத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, ஆங்காங்கே ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதேபோன்று வொசிங்டன் பகுதியில் உள்ள இராணுவத் தளங்களின் முன்வாயில்கள் நேற்று மூடப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் இல்லாதபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

Thu, 01/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை