தெற்காசிய எறிபந்து போட்டியில் தங்கம் ஏறாவூர் மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு

தெற்காசிய நாடுகளின் எறிபந்து சம்மேளனத்தினால் மலேசியாவில் நடாத்தப்பட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் வென்றெடுத்த மட்டக்களப்பு- ஏறாவூர் பாடசாலைகளின் மாணவர் குழுவை வரவேற்று, பாராட்டி கௌரவிக்கும் விசேட நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை , இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

நாடு திரும்பிய ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மற்றும் றகுமானியா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர் குழுவிற்கு ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் அதன் பொது முகாமையாளர் எம் எல். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற பாராட்டினையடுத்து வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர்மௌலானா வரவேற்றார். அதன் பின்னர் மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பேண்ட் வாத்திய இசையுடன் பிரதான வீதிவழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதிபர்களான எம்.எம். முகைதீன் மற்றும் எம்எம். ஜௌபர் ஆகியோரின் கூட்டுத்தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

கல்வித்துறை அதிகாரிகள், பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

(ஏறாவூர் குறூப் நிருபர்)

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை