லா லிகாவில் பார்சிலோனாவை பின்தள்ளியது ரியல் மெட்ரிட்

பெர்னபுவில் நடைபெற்ற செவில்லா அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 2–1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ரியல் மெட்ரிட் கழகம் லா லிகா புள்ளிப்பட்டியலில் பார்சிலோனா கழகத்தை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் பிரேசில் மத்தியகள வீரரான கசிமிரோ இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார். 57 ஆவது நிமிடத்தில் லுகா ஜொவிக் வழங்கிய பந்தை கீழ் இடது மூலையில் இருந்து பெற்று ரியல் மெட்ரிட் சார்பில் கோலாக மாற்றினார் கசிமிரோ.

எனினும் டி ஜொங் 64 ஆவது நிமிடத்தில் திருப்பிய பதில் கோலினால் போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. இந்நிலையில் 69 ஆவது நிமிடத்தில் லுௗகாஸ் வெஸ்குவஸ் பரிமாற்றிய பந்தை தாவி தலையால் முட்டிய கசிமிரோ தனது இரண்டாவது கோலை பெற்று ரியல் மெட்ரிட் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் 20 போட்டிகளில் 43 புள்ளிகளை பெற்ற ரியல் மெட்ரிட் கழகம் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டபோதும் 40 புள்ளிகளுடன் இருக்கும் பார்சிலோனா அணி அடுத்து க்ரனடா அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பார்சிலோனா கழகம் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை