மஹிபால ஹேரத் சவால் கிண்ண அகில இலங்கை திறந்த தரவரிசை மேசைப்பந்து சம்பியன்சிப் போட்டி

மஹிபால ஹேரத் சவால் கிண்ண டேபிள் டென்னிஸ் சம்பியன்சிப் போட்டிகள் கடந்த 20, 21 மற்றும் 22ம் திகதிகளில் கேகாலை மாநகர சபை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்தப் போட்டித் தொடரின் சிறந்த விளையாட்டு வீரராக பெண்கள் பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரியின் மாணவி ஜிதாரா வர்ணகுலசூரியவும், ஆண்கள் பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவன் செனுர சில்வாவும் தெரிவானார்கள். இவர்கள் இருவரும் மஹிபால ஹேரத் சவால் கிண்ணத்தை வெற்றி கொண்டார்கள்.

இந்த போட்டிகளின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதிகளாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் சப்ரகமு மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், கேகாலை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் தலைவருமான கனக ஹேரத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விசேட அதிதிகளாக கேகாலை மாநாகர மேயர் ஜீ. கே. சமரசிங்க, கேகாலை பிரதேச சபையின் தலைவர் ஜகத் ஜயசிங்க, கேகாலை மாநகர பிரதி மேயர் லலித் ஜயசாந்த, கென்ரிச் பினான்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் எரந்த அமல் கொடகே, சப்ரகமுவ மாகாண விளையாட்டுத் துறை பணிப்பாளர் தம்மிக வனிகசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த மஹீபால ஹேரத் சவால் கிண்ணம் அகில இலங்கை திறந்த தரவரிசை அட்டவணை மேசைப் பந்து சம்பியன்சிப் போட்டிக்கு அநுசரணையினை கென்ரிச் பினான்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது. இப்போட்டிகளின் இறுதி முடிவுகள் வருமாறு,

10 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் மேகலா பெர்னாண்டோ, அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின் சதேவ் தெவ்ரோவை தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/9, 11/9, 8/11, 10/12, 11/6)

10 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர் போட்டி

அம்பலங்கொடை பீ. டி. எஸ். குலரத்ன கல்லூரியின் அகயின் போஜித், கேகாலை கேகளு வித்தியாலயத்தின் திலித் தின்சராவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/8, 11/6, 12/10)

12 வயதின் கீழ் பெண்கள் ஒற்றையர் போட்டி

அம்பலங்கொடை பிரஜாபதி கோதமி மகளிர் கல்லூரியின் இமல்சா செவ்மினி, கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் சந்திநித்தி ஜயசிங்கவை தோற்கடித்து வெற்றி பெற்றார். (7/11,11/5,11/8,11/5)

12 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் சேனநாயக்கா நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையின் தெவ்மெத் வீரசேனவை தோற்கடித்து வெற்றி பெற்றார். (7/11, 11/6, 13/11, 11/7)

15 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு மியுசியஸ் கல்லூரியின் ஒனேலி லெஹென்சா, அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின் சந்துனி பிரபுத்திகாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (5/11, 12/10, 11/8, 11/7, 11/9)

15 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் செனுர சில்வா, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் தனுஸ்க விஜேசிங்கவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (12/10, 11/8, 9/11, 9/11, 11/7)

18 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு மகளிர் கல்லூரியின் ஜித்தாரா வர்ணகுலசூரிய, அம்பலங்கொடை தர்மாசோக கல்லூரியின் டீ. எச். கொலம்பகேவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (10/12, 11/4, 11/9, 11/8)

18 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் செனுர சில்வா, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் சந்துபா அலஹகோனை தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/7, 11/7, 13/11)

21 வயதின் கீழ் பெண்கள்

ஒற்றையர் போட்டி

கொழும்பு மகளிர் கல்லூரியின் ஜிதாரா வர்ணகுலசூரிய, கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் ஹன்சானி பியுமிலாவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (1/11, 6/11, 11/9, 13/11, 11/9)

21 வயதின் கீழ் ஆண்கள்

ஒற்றையர் போட்டி

வித்யார்த கல்லூரியின் பழைய மாணவர் டேபிள் டென்னிஸ் க்ளப் கிரிசான் விக்ரமரத்ன, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சுபுண வருசவிதானவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/9, 12/10, 5/11, 12/10)

பெண்கள் ஒற்றையர் போட்டி

இலங்கை துறைமுக அதிகார சபையின் இசாரா மதுரங்கி, இலங்கை இராணுவத்தின் எரந்தி வருசவிதாரணவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (8/11, 8/11, 11/9, 11/13, 11/3, 11/9, 11/7)

ஆண்கள் ஒற்றையர் போட்டி

வித்யார்த கல்லூரியின் பழைய மாணவர் டேபிள் டென்னிஸ் க்ளப் உதய ரணசிங்க, வித்யார்த கல்லூரியின் பழைய மாணவர் டேபிள் டென்னிஸ் க்ளப் கிரிசான் விக்ரமரத்னவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். (11/7, 11/8, 11/9, 11/5)

(புத்தளம் விசேட நிருபர்)

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை