மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாட்டுச் செயற்திட்டம்

தேசிய சமாதான பேரவையும் திருகோணமலை சேவிங் ஹியூமநெட்டி பவுன்டேன் நிறுவனமும் (Sarving Humanity Foundation) இணைந்து மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் செயற்திட்டத்தை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்பித்துள்ளன.

இச் செயற்திட்டத்தின் அறிமுக நிகழ்வு திருகோணமலை கிரீன் காடன் ஹோட்டலில் நேற்று (28) இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் மற்றும் திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்மின்ராணி, சேவிங் ஹியூமநெட்டி பவுன்டேசன் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் முஹம்மது அன்சாரி, தேசிய சமாதானப் பேரவையின் செயல்திட்ட முகாமையாளர் நிசாந்தகுமார ஆகியோருடன் மதத் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இச் செயற்திட்டம் தொடர்பாக சேவிங் ஹியூமநெட்டி பவுன்டேன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மது அன்சாரி கருத்துத் தெரிவிக்கையில்:

பன்மைத்துவம் மற்றும் நீதியின் நல்லாட்சியைப் பலப்படுத்துவதன் மூலம் மத சகவாழ்வைப் மேலோங்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக பொலிஸார் மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் பணியாற்றக் கூடியதாக இத்திட்டம் நடைபெறும். சமாதானம் தொடர்பான திறன் விருத்தி பயிற்சிப் பட்டறைகள் நடாத்துவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாக இக்குழு தொடர்ந்து செயற்படும். இவர்களுக்கான அனுசரணையை இவ்வமைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்புவழிபுரம் தினகரன் நிருபர்

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை