கொரோனா வைரஸ் எதிலிருந்து வந்தது?

சீன மக்கள் உணவாக உண்ணும் ஏதோவொரு பிராணியில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதனுக்குத் தொற்றியிருப்பதாக நம்பப்படுகிறது. பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதேசமயம் அவர்கள் கறி சமைக்கின்ற ஒருவகை பூனையில் இருந்து அல்லது ஒரு வகை புழுவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் ஊகங்கள் பரவுகின்றன.

வேறு சிலர் வெளவால்களில் இருந்து இந்த நோய் மக்களுக்குப் பரவுயுள்ளதாகக் கூறுகின்றனர். ஏனென்றால் அங்கு வௌவால் சூப் என்பது பலராலும் உட்கொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் சீன மக்கள் மாமிசங்களைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருந்தே நோய்க் கிருமி வந்திருக்கலாம் எனவும் அதாவது இந்த வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வனத்திலிருக்கும் பாம்புகள் உணவுக்காக அவ்வப்போது வௌவால்களையும் பிடித்து உண்பதுண்டு. அவ்வாறு வேட்டையாடப்பட்ட வௌவாலின் உடலில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாம்புக்குப் பரவியிருக்கலாம். வைரஸ் பரவிய பாம்பு அந்தச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற வகையில் நேரடித் தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே உண்ண வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதுஒருபுறமிருக்க கரப்பான்பூச்சி, ட்டுவாக்காலி, பூரான் போன்றனவும் சீன மக்களால் உண்ணப்படுகின்றன. கரப்பான்பூச்சிகள் அந்நாட்டு மருத்துவத்துறையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாய்ப்புண், குடற்புண், வயிற்றுவலி, சரும காயங்கள், இரைப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கான சிகிச்சையில் கரப்பான்பூச்சிகளில் இருந்து தயாரிக்கப்படும் ரசம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் அந்நாட்டு மருத்துவர்கள். வணிக ரீதியாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் அங்கு கரப்பான்பூச்சிகள் முன்னிலை வகிக்கின்றன. சீனாவில் கரப்பான்பூச்சிகளைப் பண்ணையில் வளர்த்து விற்பனை செய்வதென்பது குடிசைத் தொழிலாகக் கருதப்படுகிறது.

நாய்க்கறியும் சீனாவில் பிரபல உணவாகும். சீனாவின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற நாய்க்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடுவர். இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சுமார் ஒரு வாரம் இந்த நாய்கறி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. சீனாவில் கோடைகாலங்களில் நாய் இறைச்சியை உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பப்படுகிறது. அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும்.ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே நாய்கள் திருடப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாய்கள் மட்டுமின்றி பூனைக்கறியும் இந்த திருவிழாவில் கிடைக்கும்.

இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். சீனாவில் பூனை விரும்பி உண்ணப்படும் உணவாகும. சீனா முழுவதிலும் ஓர் நாளுக்கு ஆயிரக்கணக்கான பூனைகள் உண்பதற்காகவே கொல்லப்படுகின்றன.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை