அணுக் கழிவுகளின் இராட்சத கட்டுமானம் குறித்து விசாரணை

மார்சல் தீவுகளில் கடல் மட்டம் அதிகரிப்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் அணுக் கழிவு நிரப்பப்பட்ட கொங்றீட் குவிவுமாடம் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துவதற்கு அமெரிக்க பாராளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பனிப்போர் காலத்தில் அமெரிக்கா மேற்கொண்ட டஜன் கணக்கான அணு ஆயுத சோதனைகளின் பல தொன்கள் கதிரியக்கக் குப்பைகள் இந்த கொங்றீட் கட்டுமானத்திற்குக் கீழ் புதைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுமானத்தில் எற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றி ஆய்வு நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தரும்படி அமெரிக்க பாராளுமன்றம், எரிசக்தித் திணைக்களத்தை கேட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்திருக்கும் பாரிய பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1946 மற்றும் 1958 இற்கு இடைப்பட்ட காலத்தில் பசிபிக்கில் என்வடேன் பவளத் தீவுக்கு அருகில் 40க்கும் அதிகமான அணு ஆயுதச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வெடிப்புகளால் ஏற்பட்ட பள்ளம் 1970களில் அணுக் கழிவுகளை சேமிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதற்கு மேலால் தடிப்பமான கொங்றீட் அமைக்கப்பட்டது. இந்தக் கட்டுமானம் மோசமடைந்து வருவதாக அச்சம் தற்போது அதிகரித்துள்ளது.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை