மக்கள் சேவை குறித்தே தி.மு. ஜெயரத்ன சிந்திப்பார்

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானது முதல் பிரதமராக பணியாற்றும் வரை புரட்சிகரமாக செயற்பட்ட முன்னாள் பிரதமர் தி.மு.ஜெயரத்ன எப்பொழுதும் மக்கள் சேவை குறித்தே சிந்தித்து செயற்பட்டதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் தி.மு.ஜெயரத்னவின் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

நேற்று (இன்று ஜனவரி 9ஆம் திகதியாகும்.) இன்று போன்று நாளிலே அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 1970பாராளுமன்றத்தில் நானும் அவரும் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவானோம். அன்று முதல் புரட்சிகரமாக செயற்பட்டார். பிரதமராக செயற்பட்ட காலம் வரை அவரின் செயற்பாடுகள் புரட்சிகரமானதாக இருக்கும்.

பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் அவர் முன்வைத்த கருத்துக்கள் அவரின் வேகமான பேச்சு என்பன நினைவு கூறத்தக்கவை. மக்கள் நல தலைவரான அவர் மக்களுக்கு சேவையாற்ற ஒருபோதும் பின்நின்றதில்லை. புரட்சிகர அரசியல்வாதியான அவர் 'கம்பொல கடாபி' என்று கூட அழை க்கப்பட்டார். வேறு கருத்துள்ள நபர்களுக்கும் உதவி செய்துள்ளார்.

முஸ்லிம், தமிழ் மக்களுடன் நெருக்கமாக பழகி உதவிகள் வழங்கியுள்ளார்.

மூன்று மொழிகளையும் கற்றுள்ள அவர் சு.கவில் 13ஆவது நபராக சுதந்திரக் கட்சியில் இணைந்து எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் கொள்கைகளுடன் பிணைந்து செயற்பட்டார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுடனும் நெருக்கமாக செயற்பட்டார். வேகமாக பேசுவதை போன்றே வேகமாக நடந்து செல்லக்கூடியவர். தேகாரோக்கியத்துடன் இருந்த அவர் ஆற்றி சேவைகள் மறக்க முடடியாதவை என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 01/10/2020 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை