பாரசீக வளைகுடா பதற்றம்; எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

பாரசீக வளைகுடா யுத்த சூழல் மற்றும் உலக சந்தையின் விலையதிகரிப்பின் அடிப்படையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படலாமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்கா- ஈரானுக்கிடையில் யுத்தம் ஏற்பட்டால் நாட்டில் எரிபாருள் விலை அதிகரிப்பு ஏற்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: பெற்றோல், டீசல், விமானங்களுக்கான எரிபொருட்கள் 20 நாட்களுக்குப் போதியவாறு கையிருப்பில் உள்ளன.

வளைகுடா யுத்தம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படும் இந்த சூழ்நிலையில், யுத்தம் ஏற்படக் கூடாதென்பதே உலக சமாதானத்தை விரும்புவோரின் பிரார்த்தனையாகும். சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்தும் இதுவே. எனினும் உலக சந்தையில் பாலியளவில் அதிகரித்திருந்த எரிபொருள் விலை சற்று தளர்த்தப் பட்டுள்ளது.

யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் இந்நிலை நீடித்தால் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்.

நாம் எரிபொருள் உற்பத்தி செய்யாத நிலையிலும் உலக சந்தைக்கிணங்க விலையை அதிகரிக்க நேரும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை