நகரத்திலும் கிராமத்திலும் கல்வியில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்

மாணவர்களை நகர்புற பாடசாலைகளில் சேர்ப்பதற்காக பெற்றோர்கள் ஓடுவதனை மாற்றி நகர்புற கல்வி நிலையை கிராமபுறங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அந்தவகையில் யாழ்.தென்மராட்சியில் தரம் 1இற்கு இந்த ஆண்டு 150 மாணவர்கள் மட்டுமே அனுமதி கோரிய நிலையில் ஏனையோர் நகரை நோக்கி சென்றுள்ளனர். எனவே இந் நிலையை மாற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

இப்போதும் நகர பாடசாலைகளை தேடி ஒடுகின்றனர். ஏனெனில் பெரிய பாடசாலை நல்ல தனியார் கல்வி நிலையம் என இரண்டையும் எதிர்பார்த்து நகரை நோக்கி மாணவர்கள் ஓடுகின்றனர். அதற்காக பெற்றோரும் செல்லும் நிலைமையே காணப்படுகின்றது.

இதனை ஒரே நிலைமையில் கொண்டுவர கல்வியில் சமநிலையினையும் தனியார் நிலையங்களில் அரச பாடசாலை ஆசிரியர்கள் கற்பிப்பதில் ஓர் வரையறையினையும் அரசு ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே இவற்றின் மூலம் எதிர்காலத்தில் தென்மராட்சியினை வளப்படுத்த கல்வியினை கண்டிப்பாக வளர்க்க வேண்டும். அதேநேரம் அந்த வசதிகளை இங்கும் ஏற்படுத்தி நகரை நோக்கி ஓடியவர்களை இங்கே வரவழைக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

கோப்பாய் நிருபர்

Wed, 01/22/2020 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை