உலகின் மிகப்பெரிய இரட்டை எஞ்சின் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

இரட்டை எஞ்சின் விமானங்களில் உலகிலேயே மிக நீண்டதும், மிகப் பெரியதுமாக வடிவமைக்கப்பட்டுள்ள போயிங் நிறுவனத்தின் 777–9எக்ஸ் விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

425 பேர் பயணிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இவ்விமானம், தொடர்ந்து 7,600 கடல் மைல் தொலைவு பறக்கக்கூடியதாகும். ஏற்கனவே மோசமான வானிலை காரணமாக இருமுறை சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை வானிலை சீரானதை அடுத்து சியாட்டிலில் உள்ள பெயின் ஓடுதளத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

பாதுகாப்பு கருதி வொஷிங்டன் கடற்கரை மற்றும் பொதுமக்கள் வசிக்காத பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் அடி உயரம் வரை வானில் பறந்த விமானம் பின்னர் தரையிறக்கப்பட்டது. போயிங் நிறுவன விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானதால், நெருக்கடிக்கு ஆளான அந்நிறுவனத்துக்கு இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி நம்பிக்கையளிப்பதாக இருக்கும்.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை