பாடசாலைகளில் எரிபொருளை கொட்டிய பயணிகள் விமானம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று பல பாடசாலைகளுக்கு மேலால் எரிபொருளைக் கொட்டியுள்ளது.

இந்த சம்பவத்தால் சிறுவர்கள் பலர் உட்பட்ட குறைந்த 60 பேர் தோல் எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவசர தரையிறக்கத்திற்காக இவ்வாறு எரிபொருள் கொட்டப்பட்டிருக்கக் கூடும் என்றபோதும், குறிப்பிட்ட பகுதிகளில், அதிகமான உயரத்தில் அதனைச் செய்வதற்கு விமானப்போக்குவரத்து சட்டங்கள் விதிக்கின்றன.

எஞ்சின் பிரச்சினையால் இந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் விமான நிலைத்திற்கு திரும்பியுள்ளது.

இவ்வாறு எரிபொருளை கொட்டியதால் குறைந்தது ஆறு உள்ளூர் பாடசாலைகளைச் சேர்ந்த குறைந்தது 60 சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். அனைத்தும் சிறு காயங்களாகும்.

தரையிறங்கும் எடையை குறைப்பதற்கு எரிபொருளை விடுவித்ததாக டெல்டா ஏர்லைன்ஸ் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Thu, 01/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை