உலகின் குள்ள மனிதன் மரணம்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் மிகக் குள்ளமான மனிதனான நேபாள் நாட்டின் காகேந்திரா தபா மகார் தனது 27 வயதில் உயிரிழந்தார்.

நிமோனியா காய்ச்சலால் ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது சபோதரர் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தின் பக்லுங் மாவட்டத்தைச் சேர்ந்த மகார் 67.08 சென்டிமீற்றர் (2 அடி 2.41 அங்குலம்) உயரம் கொண்டவராவார். அவரது மொத்த உடல் எடை 6 கிலோ மாத்திரமாகும். 2010 இல் அவர் உலகின் மிகக் குள்ளமான மனிதனாக பதிவானார்.

எனினும் சுமார் 55 சென்டிமீற்றர் உயரத்தில் இருந்த மற்றொரு ஆடவர் அவரின் பட்டத்தை எடுத்துக்கொண்டபோதும் 2015இல் அந்த ஆடவர் உயிரிழந்த பின்னர், மகாருக்குப் பட்டம் திரும்ப வந்தது.

மகார் பிறந்தபோது அவர் உள்ளங்கை அளவு மட்டுமே இருந்ததாக அவரின் தாயார் கூறினார். அவரது மரணத்துக்குக் கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு இரங்கல் தெரிவித்தது.

பிலிப்பைன்ஸில் சுமார் 60 சென்டிமீற்றர் உயரத்தில் இருக்கும் ஜூன்ரே பலாவிங் உலகின் மிகச் சிறிய மனிதர் என்று பதிவானபோது அவரால் நடக்க இயலாது.

70 சென்டிமீற்றர் உயரத்தில் இருக்கும் கொலம்பியாவைச் சேர்ந்த எட்வர்ட் ஹெர்னன்டஸ் தற்போது உலகின் மிகக் குள்ளமான நடமாடும் மனிதராக இருப்பார்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை