உக்ரைன் விமான விபத்து: கறுப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்குவதை நிராகரித்தது ஈரான்

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு தகவல் பதிவு கறுப்புப் பெட்டிகளையும் அமெரிக்காவிடமோ விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனத்திடமோ ஒப்படைக்கப்போவதில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

ஈரானிய விமான நிலையத்திலிருந்து கடந்த புதன்கிழமை விடியற்காலையில் புறப்பட்ட போயிங் 737–800ரக விமானம், விமான நிலையத்துக்கு 45கிலோமீற்றர் அப்பால் ஒரு புல்வெளியில் விபத்துக்குள்ளானது. 

அதில் பயணம் செய்த 176பேரும் உயிரிழந்தனர். 

சர்வதேச விமானத்துறை விதிமுறைகளின்படி விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஈரானுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. 

ஆனால், விமானம் ஒன்று விபத்துக்குள்ளானால் அதைத் தயாரித்த நிறுவனம் விசாரணையில் ஈடுபடுவது வழக்கம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தினர். 

அத்துடன் ஒரு சிலரால் மட்டுமே தகவல் பதிவுப் பெட்டிகளில் பதிவான தகவல்களை ஆராய முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். 

“இந்த விபத்துக் குறித்து உக்ரைனி யர்களின் பங்கேற்புடன் ஈரான் விமானப் போக்குவரத்து நிறுவனம் விசாரணை நடத்தும்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் அல் அபெத்சாதா குறிப்பிட்டுள்ளார்.  

இந்நிலையில் எந்த ஒரு உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விசாரணை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமது நாடு தயாரா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு தெரிவித்துள்ளார்.  

இந்த விபத்தில் ஈரான் மற்றும் கனடா நட்டவர்களே அதிகம் பேர் உயிரிழந்தனர். 

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்தில் விபத்து நேர்ந்தது. எனினும், தாக்குதலுக்கும் விபத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.   

 

Fri, 01/10/2020 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை