லிபியாவின் முக்கிய நகரில் எதிர்ப்புப் படை முன்னேற்றம்

லிபியாவில் மூலோபாய முக்கியம் வாய்ந்த சிர்த் நகரை கைப்பற்றியதாக எதிர்ப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு இஸ்லாமிய அரசுக் குழு துரத்தப்பட்டது தொடக்கம் சிர்த் நகர் லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசு மற்றும் அதன் கூட்டணிப் படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஜெனரல் கலீபா ஹப்தருக்கு ஆதரவாக எதிர்ப்புப் படையினர் தலைநகர் திரிபோலியை கைப்பற்ற படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

ஜெனரல் ஹப்தருடைய படையினரின் வாகனத் தொடரணிகளை காண முடிவதாக மத்தியதரைக் கடற்கரையில் அமைந்திருக்கும் வடக்கு நகரான சிர்த்தின் குடியிருப்பாளர்கள் கூறியதாக ரோய்ட்டஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. “நகரின் பெரும் பகுதியை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச் சத்தங்களையும் எம்மால் கேட்க முடிகிறது” என்று பெயர் குறிப்பிடாத குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்

லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசுக்கு உதவியாக துருக்கி துருப்புகளை அனுப்ப ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே எதிர்ப்புப் படையினர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை