டிரம்ப்பின் அமைதி திட்டம்: பலஸ்தீனர்கள் எச்சரிக்கை

நீண்ட தாமதத்திற்கு உள்ளாகி இருக்கும் மத்திய கிழக்கு அமைதித் திட்டம் குறித்த விபரத்தை வெளியிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிய தலைவர்களை வொசிங்டனுக்கு அழைத்துள்ளார்.

எனினும் தாமின்றி எந்த உடன்படிக்கையையும் எட்ட முடியாது என்று பலஸ்தீன தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் அவரது பிரதான போட்டியாளரான முன்னாள் இராணுவ ஜெனரல் பென்னி காட்ஸ் இருவருக்கும் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். நாளை நெதன்யாகுவுடனான சந்திப்பில் இந்தத் திட்டம் பற்றி வெளியிடப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

எனினும் டிரம்ப் நிர்வாகத்துடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர் நபில் அபூ ருதைனி, பலஸ்தீனர்கள் மற்றும் பலஸ்தீன தலைமையின் ஒப்புதல் இன்றி எந்த அமைதி உடன்படிக்கையையும் அமுல்படுத்த முடியாது என்றார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை 2014 இல் முறிவடைந்ததோடு, இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையை பின்பற்றும் டிரம்பின் அமைதித் திட்டம் இன்னும் வெளியிடப்படாதபோதும் பலஸ்தீன தரப்பு அது பற்றி நம்பிக்கை இழந்துள்ளது.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை