காரைதீவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் காரைதீவில் டெங்கு ஒழிப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு உடனடியாக புகை விசிறப்பட்டது.

தொற்று நோய்களுக்கான பிராந்திய வைத்திய அதிகாரி ​ெடாக்டர் ஆரிப் தலைமையிலும் காரைதீவுக்கான பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஒத்துழைப்புடனும் சுமார் 100 அதிகாரிகள் பங்குகொண்டு 1500 வீடுகள் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது ஏடிஸ் வகை டெங்கு நுளம்புகள் காணப்பட்ட 4 வீடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் 350 வீடுகளுக்கு எதிராக சிவப்பு பத்திரம் கொடுக்கப்பட்டன.

பணிப்பாளர் ​ெடாக்டர் சுகுணன் கூறுகையில், நாங்கள் ஓய்வு நாட்களில் கூட தொடர்ச்சியாக வேலை செய்தும் பொதுமக்கள் பாராமுகமாக இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை