தங்கப் பதக்கம் வென்ற மாணவன் அப்துல் ஹக்கமுக்கு வரவேற்பு

பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கண்டி சித்திலெப்பை கல்லூரி மாணவன் அப்துல் ஹக்கமுக்கு பறகஹதெனிய மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

சர்வதேச கிக்பொக்சிங் குத்துச் சண்டைப் போட்டி பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி முதல் 27 வரை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட கண்டி சித்திலெப்பை கல்லூரி மாணவன் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 80 கிலோ கிராம் எடையுள்ள குத்துச் சண்டைப் போட்டியில் மூன்று சுற்றுக்களில் பாகிஸ்தானின் மூன்று வீரர்களை வீழ்த்தி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

குருநாகல் நகரில் இருந்து கண்டி -குருநாகல் பிரதான வீதி ஊடாக வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மலர் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையில் இருந்து சென்ற 22 வீரர்களில் 13 தங்கமும் ஆறு வெண்கலமும் பெற்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இவர் பறகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த தஸ்லிம் தம்பதிகளின் புதல்வருமாவர்.

மாவத்தகம பிரதேச சபை உறுப்பின் எதிர்க்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் முஆத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

 மாவத்தகம நிருபர் 

 

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை