​ேதசிய டிப்ளோமா பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை

மக்களை கஷ்டத்திற்குள்ளாக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து விலகி முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபபட்ட தேசிய டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பு நடைபெற்றது.இதன்போது அரசாங்கம் சார்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.பட்டதாரிகள் மற்றும் அதற்கு சமமான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. தேவையான நிதி ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசாங்க, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கேற்ப பட்டத்திற்கு பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு சுமார் 53,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மார்ச் மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகும்.

பல்வேறு அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 180 நாட்களை பூர்த்தி செய்துள்ளவர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலில் நிரந்தரமாக்குதல் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அனைவரையும் நிரந்தர சேவையில் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் கல்விகற்று வரும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி அலுவலக சூழலில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முழுமையான சுதந்திரம் உள்ளது. இது எந்தவொரு அரசாங்கமும் இதற்கு முன்னர் மேற்கொள்ளாத ஒரு தீர்மானமாகும்.

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை