ஆஸி ஓபன் அரையிறுதியில் முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சித் தோல்வி

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, 4ஆம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. மெல்போர்ன் நகர் ரோட் லேவர் அரங்கத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 14ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

ஆஷ்லே பார்டி சொந்த மண்ணில் விளையாடியதால் அவருக்கு கூடுதல் பலமாக கருதப்பட்டது. ஆனால் சோபியா கெனின் அவரை திணறடித்தார். இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சோபியா கெனின் 7(8)–6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.

2ஆவது செட்டிலும் கெனின் கையே ஓங்கியது. இதனால் 2ஆவது செட்டை 7–5 எனக் கைப்பற்றி நேர் செட்டில் ஆஷ்லேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 4ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் – ஸ்பெயினைச் சேர்ந்த முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

முதல் செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் தரநிலை பெறாத முகுருசா 7(10) –6(8) என முதல் செட்டை கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7–5 எனக் கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் முகுருசா.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின் – முகுருசா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

Fri, 01/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை