டிரம்பின் எச்சரிக்கையை பெண்டகன் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தபோதும் ஈரானின் காலாசார தலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

“போர் விதிகளை அமெரிக்கா இராணுவம் பின்பற்றும்” என்று கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களை சந்தித்த எஸ்பர் குறிப்பிட்டார்.

அமெரிக்க கலாசார தலங்கள் தாக்கப்படுவது குறித்து டிரம்ப் கடந்த சனிக்கிழமை ட்விட்டரில் எச்சரித்ததோடு அடுத்த தினமும் அதனை உறுதி செய்திருந்தார். இதற்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையிலேயே பெண்கடன் அதனை மறுத்துள்ளது. உலகின் இயற்கையான மற்றும் கலாசார மரபுரிமை சொத்துகளை பாதுகாக்கும் 1972 உடன்படிக்கையில ஈரான் மற்றும் அமெரிக்கா கைச்சாத்திட்டிருப்பதாக ஐ.நாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் செயலாளர் நாயகம் அன்ட்ரே அசுலாய் வலியுறுத்தி இருந்தார்.

ஈரானில் 22 யுனெஸ்கோ மரபுரிமை சொத்துகள் உள்ள தலங்கள் அமைந்துள்ளன,

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை