லிபிய நாட்டின் போர் தரப்புகள் ஜெர்மனியில் முக்கிய சந்திப்பு

லிபியாவில் இடம்பெற்று வரும் சிவில் யுத்தத்தை நிறுத்தும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியாக அந்நாட்டின் போர் புரியும் தரப்புகள் ஜெர்மனியின் நேற்று பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்தன.

இரு தரப்புக்கும் இடையிலான முந்தைய போர் நிறுத்த முயற்சி தோல்வியுற்ற நிலையிலேயே இந்த புதிய சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

லிபியாவின் பலம் மிக்க ஜெனரல் கலீபா ஹப்தர் மற்றும் தலைநகர் திரிபோலியை தளமாகக் கொண்ட ஐ.நா ஆதரவு அரசுக்கு இடையிலேயே மோதல் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் லிபியாவில் ஐ.நாவின் ஆயுதத் தடையை வெளிநாட்டு சக்திகள் மதித்து நடப்பது மற்றும் இந்தப் போரில் வெளிநாட்டு தலையீடுகளை தடுக்கும் நோக்கிலுமே இந்த மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லிபியாவின் இரு போட்டிக் குழுக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வெளிநாட்டுகள், ஐ.நா மற்றும் ஏனைய வெளிநாட்டு சக்திகளை ஒன்றிணைத்தே ஜெர்மனி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டி மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் ஆகியோரும் பங்கேற்றனர். லிபியாவின் திரிபோலி அரசுக்கு ஆதரவாக அந்நாட்டுக்கு துருப்புகளை அனுப்பிய எர்துவான், போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இந்த பேச்சுவார்த்தை முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை