பிணைமுறி குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பதை அனை வரும் அறிவர். அவர்கள் அனைவரையும் விரைவில் அம்பலத்திற்கு கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா பிணைமுறி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பான விடயங்களை வெளியிட வேண்டுமென சபாநாயகர் கரு ஜெயசூரியவைக் கேட்டுக்கொண்டார். இதன்போது குறுக்கிட்டு பேசிய போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அது தொடர்பில் சபையில் சிறு சர்ச்சை இடம்பெற்றதுடன் அஜித் பி பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கருத்து தெரிவித்தனர்.

அஜித் பி பெரேரா எம்.பி.

மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை 900மில்லியன் ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையான திருடர்கள் யார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க அதனை விரைவாக வெளியிடுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி

கடந்த நவம்பர் 27ஆம் திகதி சம்பந்தப்பட்ட அறிக்கையை கோப் குழு கையளித்து விட்டதாகவும் அரசாங்கம் மாற்றம் பெற்றதுடன் கோப் குழுவும் கலைக்க ப்பட்டுள்ள நிலையில் புதிய குழுவை நியமித்து அதன் மூலம் மேற்படி அறிக்கையை வெளியிட வேண்டும்.

சபாநாயகர் கரு ஜயசூரிய

அடுத்த வாரம் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி அதுபற்றி கலந்துரையாடப்படும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,       ஷம்ஸ் பாஹிம்

Sat, 01/04/2020 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை