யெமனில் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களில் 70 பேர் பலி

யெமனின் மத்திய மாகாணமான மாரிப்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் குறைந்த 70 யெமன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஈரான் ஆதரவு ஹூத்திக்கள் மற்றும் சவூதி தலைமையிலான கூட்டணியின் ஆதரவை பெற்ற யெமன் அரசுக்கு இடையில் கடந்த சில வாரங்களாக ஒப்பீட்டளவில் அமைதி நீடித்து வந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தலைநகர் சனாவின் கிழக்காக சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் மாரிப் இராணுவ முகாம் ஒன்றில் உள்ள பள்ளிவாசலேயே இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதில் 70 படையினர் கொல்லப்பட்டு 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக மாரிப் நகர மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. ஹுத்திக்களின் நஹாம் பிராந்தியத்தில் அரச ஆதரவுப் படையினர் பாரிய அளவினால் படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து அடுத்த தினமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு தலைநகர் சனா உட்பட நாட்டின் கனிசமான பகுதியை ஹுத்திக்கள் கைப்பற்றியது தொடக்கம் யெமனில் போர் நீடித்து வருகிறது.

Mon, 01/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை