இந்திய கடனுதவியில்500 பஸ்கள் கொள்வனவு

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக 500 பஸ்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். பயணிகளுக்கு உட்பிரவேசிப்பதற்கு 500 பஸ்கள் வசதியாக நவீன பஸ்களை இலங்கைக்கு பெற்றுத் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய அரசாங்கத்திடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய இப் புதிய பஸ்களை இலங்கை போக்குவரத்துச் சபை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 15.03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 500 பஸ்களே இறக்குமதி செய்யப்படவுள்ளன. இவை பயணிகள் இலகுவாக உட்பிரவேசிப்பதற்கான வசதிகளைக் கொண்டிருக்கும். இலங்கை போக்குவரத்துச் சபை நகர்ப் புறங்களில் இந்த பஸ்களை சேவைகளில் ஈடுபடுத்துமென்றும் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 01/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை