4 DIGகள் உள்ளிட்ட 43 பொலிஸாருக்கு இடமாற்றம்

4 DIGகள் உள்ளிட்ட 43 பொலிஸாருக்கு இடமாற்றம்-Transfer for 43 Police Personals

பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் (DIG) நால்வர் உள்ளிட்ட 43 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

4 பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் (DIG), 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 3 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 7 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP), 7 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் (CI), 18 பொலிஸ் பரிசோதகர்கள் (IP) ஆகிய 43 பேருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Sat, 01/04/2020 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை