3rd T20: SLvIND; தொடரை 2-0 என வென்றது இந்தியா

3rd T20: SLvIND; தொடரை 2-0 என வென்றது இந்தியா-3rd T20-SLvIND-Ind Won the Match and Series as 2-0

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 3ஆவது இறுதியுமான ரி20 போட்டியில் இந்தியா 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நேற்று (11) புனேயில் இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்த இலங்கை அணியின் அழைப்பை ஏற்று இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை இந்திய அணி வெற்றி பெற்றது.

சிறந்த துடுப்பாட்ட செயல்திறனை வெளிக்காட்டிய இந்திய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த தொடக்கத்தை வழங்கி அணியை பலப்படுத்தினர்.

அவ்வணி சார்பில் கே.எல். ராஹுல், ஷிகர் தவான் அரைச்சதம் கடந்தனர். இருவரும் தலா 36 பந்தகளில் முறையே 54 மற்றம் 52 ஓட்டங்களை பெற்றனர். மனிஷ் பாண்டே 31 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராத் கோலி 26 ஓட்டங்களையம், ஷர்துல் தாகூர் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் லக்‌ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, வணிந்து ஹசரங்க, லஹிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அணியின் தலைவர் லசித் மாலிங்க 4 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களை வழங்கி, எவ்வித விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. கடந்த போட்டியிலும் அவர் எவ்வித விக்கெட்டையும் (0/41 (4.0) கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக முதல் ஓவரில் ஒரு ஒட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

3rd T20: SLvIND; தொடரை 2-0 என வென்றது இந்தியா-3rd T20-SLvIND-Ind Won the Match and Series as 2-0

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஐவரும் 10 ஓட்டங்களைக் கூடக் கடக்காது பெரிதும் ஏமாற்றமளித்தனர்.

நடு வரிசையில் களமிறங்கிய அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.

தனஞ்சய டி சில்வா  36 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றார். அதில் 4 ஓட்டங்கள் 8 மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடக்கம்.

அஞ்சலோ மெத்திவ்ஸ் 6 ஓட்டங்கள் 3 மற்றும் 4 ஓட்டம் உள்ளடங்கலாக 20 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் பெரிதும் பங்களித்த இந்திய பந்து வீச்சாளர்கள், ஆரம்பத்திலிருந்தே தங்களது ஆதிக்கத்தை காண்பித்தனர்.

3rd T20: SLvIND; தொடரை 2-0 என வென்றது இந்தியா-3rd T20-SLvIND-Ind Won the Match and Series as 2-0

நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடினமான பந்து வீச்சை வெளிப்படுத்திய, ஜஸ்பிரித் பூம்ரா 2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டமற்ற ஓவரை வழங்கியதோடு, 5 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி ஒரு விக்கெட்டை எடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக, ஷர்துல் தாகூர் தெரிவானதோடு, தொடரின் சிறப்பாட்டக்காரராக, நவ்தீப் சைனி தெரிவானார்.

அந்த வகையில் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் ஏனைய இரு போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரை 2-0 என வெற்றி கொண்டுள்ளது.

இந்தியா 201/6 (20.0)
கே.எல். ராஹுல் 54 (36)
ஷிகர் தவான் 52 (36)
மனிஷ் பாண்டே 31 (18)
விராத் கோலி 26 (17)
ஷர்துல் தாகூர் 22 (08)

லக்‌ஷான் சந்தகன் 3/35 (4.0)
வணிந்து ஹசரங்க 1/27 (4.0)
லஹிரு குமார 1/46 (4.0)
லசித் மாலிங்க 0/40 (4.0)

இலங்கை 123/10 (15.5)
தனஞ்சய டி சில்வா  57 (36)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 31 (20)

நவ்தீப் சைனி 3/28 (3.5)
வொஷிங்டன் சுந்தர் 2/37 (4.0)
ஷர்துல் தாகூர் 2/19 (3.0)
ஜஸ்பிரித் பூம்ரா 5/1 (2.0)

ஆட்ட நாயகன்: ஷர்துல் தாகூர்
தொடரின் நாயகன்: நவ்தீப் சைனி

Sat, 01/11/2020 - 12:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை