நாட்டின் கரையோர பிரதேசங்கள் சுத்திகரிப்பு; 36,459 கிலோ கழிவுகள் மீட்பு

நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பிரதேசத்திலிருந்து கடந்த ஒருவார காலத்துக்குள் 03 இலட்சத்து 92 ஆயிரத்து 697 கழிவுப் பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் டொக்டர். டேர்னி பிரதீப்குமார நேற்று தெரிவித்தார்.  

மீட்கப்பட்ட கழிவுகளின் மொத்த நிறை 36ஆயிரத்து 459 கிலோகிராமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஒரு வார காலமாக நாட்டைச் சுற்றியுள்ள 98 கிலோமீற்றர் கரையோர பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு பணிகளின்போதே இக் கழிவுப் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனிநபர் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள், மூடிகள், பிளாஸ்டிக் கோப்பைகள், பொலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்களே அதிகமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இம்மீட்பு பணியில் கரையோர பாதுகாப்பு அதிகாரசபையுடன் கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கடற்படையினர், விமானப்படையினர், இராணுவத்தினர், அரசாங்க பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 9 ஆயிரத்து 67பேர்   ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 01/07/2020 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை