கம்போடியாவில் கட்டடம் இடிந்து 36 பேர் உயிரிழப்பு

கம்போடியாவில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்த வரவேற்பு இல்லம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்திருப்பதோடு, 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் கட்டடப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டனர்.

தலைநகர் ப்னோப் பென்னில் இருந்து தெற்மேற்காக சுமார் 160 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் துறைமுக நகரான கெப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஏழு மாடிகள் கொண்ட கொங்றீட் கட்டடம் இடிந்து விழுந்தது.

“கட்டடத்தில் தங்கியிருக்கு ஆறு தொடக்கம் ஏழு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று கட்டட மற்றும் மர வேலைகள் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சோ சோல்ன் குறிப்பிட்டுள்ளார். “கர்ப்பிணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார் மூன்று தொடக்கம் ஏழு மாதங்கள் கொண்ட குழந்தை தாயுடன் ஊயிரிழந்துள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டடத்துக்கு உரிமையாளர்களான தம்பதி விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை