ஈரான் தாக்குதலில் அமெரிக்க படையினர் 34 பேருக்கு காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க படையினருக்கு, அதிர்ச்சியால் மூளைக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

17 பேர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பெண்டகனின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

ஈரான் இராணுவ ஜெனரல் காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதில் அமெரிக்கர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பதால் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஈரான் நடத்திய தாக்குதலால் 11 அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சியால் ஏற்பட்ட மூளை பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை