துருக்கி பூகம்பத்தில் பலி 31 ஆக உயர்வு

கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்ததோடு 1,400 பேர் வரை காயமடைந்தனர்.

எலசிக் மாகாணத்தில் சிவிரிக் நகரை மையம் கொண்டிருந்த 6.8 ரிக்டர் அளவு பூகம்பத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு மக்கள் வீதிகளுக்கு ஓட்டம்பிடித்தனர். இதுவரை 43 பேர் காப்பற்றப்பட்டிருப்பதோடு மேலும் 20க்கும் அதிகமானவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. துருக்கியில் பூகம்பங்கள் அடிக்கடி நிகழ்வதோடு 1999இல் மேற்கு நகரான இஸ்மிட்டில் ஏற்ட்ட பூகம்பத்தில் சுமார் 17,000 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை உள்ளுர் நேரப்படி இரவு ஒன்பது மணி அளவிலேயே இந்த பூகம்பம் ஏற்பட்டது. இதன் அதிர்வு அண்டை நாடுகளான சிரியா, லெபனான் மற்றும் ஈரானிலும் உணரப்பட்டது.

உயிர்தப்பியோரைத் தேடி தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை