3000 ஆண்டு மம்மியின் குரல் மீள் உருவாக்கம்

3000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்து மதகுரு ஒருவரின் மம்மியைக் கொண்டு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அவரது குரல் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

நெஸ்யமன்னின் என்னும் அந்த மத குருவின் குரல் செயற்கை குரல் வளையங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மதகுரு கி.மு 1099 – 1069 காலகட்டத்தில் வாழ்ந்தவர். பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்ய அவரின் குரல் வலிமையானதாக இருந்திருக்கும்.

நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கினர். அந்த குரல் மூலம் ஆ மற்றும் ஏ என்ற உயிரெழுத்துகளை ஆய்வாளர்கள் உச்சரிக்கச் செய்தனர்.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை