லிபிய இராணுவ கல்லூரி மீது வான் தாக்குதல்: 28 பேர் பலி

லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள இராணுவக் கல்லூரி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகாதபோதும் கிழக்கு லிபியாவை தளமாகக் கொண்ட ஜெனரல் கலீபா ஹப்தருக்கு ஆதரவான கிளர்ச்சிப் படையினரே இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக நம்பப்படுகிறது.

தரையில் துண்டாடப்பட்ட உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்டிசிகள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அரசுக்கு ஆதரவாக லிபியாவில் துருக்கிப் படைகளை நிறுத்த உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசு ஜெனரல் ஹப்தரின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போராடி வருகிறது.

2011 ஆம் ஆண்டு லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

Mon, 01/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை