யானை - மனிதன் மோதல்; வருடாந்தம் 250 யானைகள் உயிரிழப்பு

யானை - மனிதன் மோதல் காரணமாக வருடாந்தம் 250யானைகளும் 80மனிதர்களும் உயிரிழப்பது அடையாளம் காணப்பட்டிருப்பதனால் அதனை தடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களில் அரசாங்கம் கூடுதல் அக்கறை செலுத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில், உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக சொத்துக்கள் மற்றும் உற்பத்திகள் இழக்கப்படுவதனால் நாடு பொருளாதார இழப்புக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு மின்சார வேலிகளை பராமரிப்பதற்கும் யானை- மனிதன் மோதலை கட்டுப்படுத்துவதற்குரிய உத்தேச வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதேவேளை யானைகளால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கும் நிருவகிப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிராமிய, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்திலான ஒழுங்குபடுத்தல் குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 01/10/2020 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை