2020 புத்தாண்டு தீர்க்கமானதொரு காலப்பகுதியாகும்

இந்த 2020 புத்தாண்டுப் பிறப்புடன் தீர்க்கமானதொரு காலப்பகுதி ஆரம்பமாகியுள்ளது. அத​னோடிணைந்த அனைத்து சவால்களையும் தனிநபர்கள் என்ற வகையிலும் ஒரு தேசமாகவும் வெற்றிகொள்ள வேண்டியது அவசியமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

பொருளாதார அபிவிருத்தியைப் போன்றே அரசியல் ரீதியிலும் இவ்வருடம் மிக முக்கியத்துவமுடையதாகும். தேசிய ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாத்தவாறு இதற்கான செயற்பாடுகள் முன்னடுக்கப்பட வேண்டும். நாட்டில் உண்மையான சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குமான சரியான பாதை அதுவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நேரத்தை முகாமைத்துவம் செய்து பொது நலனிற்கான கடமைகளை முறையாக நிறைவேற்றப் பழக்கிக் கொள்வதன் மூலமே எமது குறிக்கோள்களை நாம் வெற்றிகொள்ள முடியும்.

மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குவதற்குமான தமது கடமைகளை நிறைவேற்ற அனைவருக்கும் பலமும் தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அதேவேளை அனைத்து விதமான நல்ல எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

 

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை