கிழக்குக் கொங்கோவில் 20 பேர் கிளர்ச்சியாளர்களால் கொலை

கிழக்கு கொங்கோ ஜனநாயக குடியரசில் கிளர்ச்சியாளர்களால் 20 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

உகண்டாவின் கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் கிளர்ச்சிப் போராளிகளால் பெனி பிராந்தியத்தில் அபெடினா சானா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை அடுத்து அந்தப் பிராந்தியத்திற்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கிழக்குக் கொங்கோவில் இன மற்றும் நிலம் சார்ந்த பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. கனிம வளங்களை கட்டுப்படுத்துவது குறித்தே அங்கு பிரதானமாக போட்டி நீடித்து வருகிறது.

இதில் உகண்டாவை பூர்வீகமாகக் கொண்டு கூட்டணி ஜனநாயகப் படை கிளர்ச்சியாளர்கள் கிழக்கு கொங்கோவில் பொதுமக்கள் மீது கடந்த இரண்டு தசாப்தங்களாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. தங்கம் நிறைந்த கிழக்கு கொங்கோ ஜனநாயக குடியரசில் கனிமங்களை கடத்துவதில் இந்த கிளர்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை