ஜனநாயகத்தை பாதுகாத்த 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க முயற்சி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் ஜனநாயகத்தை ஸ்தாபித்து மக்கள் உரிமையை பாதுகாப்பதற்கு எம்மால் முடிந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கம் 19வது திருத்தத்தையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் இல்லாதொழிக்க முயற்சிப்பதாக ஐ. தே. க. பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.  

அவர்களின் நோக்கம் அமைதி, சமாதானம் மற்றும் ஜனநாயக சூழலை இல்லாதொழித்து நாட்டில் மீண்டும் சர்வாதிகார குடும்ப அதிகாரத்தை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிகொண்ட ஜனநாயகத்தின் மதிப்பை அறியாது அதனை மீண்டும் இல்லாதொழிப்பதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தடுத்து வெற்றிகொண்ட சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்வது நாட்டை நேசிக்கும் மக்களின் கடமையாகும்.

இந்த நிலையிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணையுமாறு சகல தரப்பினருக்கும் தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)    

Wed, 01/22/2020 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை