பனிச்சரிவில் புதையுண்ட சிறுமி 18 மணி நேரத்தின் பின் மீட்பு

பாகிஸ்தான் நிர்வாகக் காஷ்மிர் பகுதியில் பனிச் சரிவில் புதையுண்ட 12 வயது சிறுமி ஒருவர் 18 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பனிச்சரிவு ஏற்பட்டபோது தனது வீட்டு அறையின் கூரைக்குக் கீழ் சிக்குண்ட சமினா பிபி என்ற அந்த சிறுமி, “உதவிக்காக கூச்சலிட்டு கத்தினேன்” என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். தாம் அங்கேயே இறந்துவிடுவேன் என்று நினைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பக்வாலி கிராமத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட சமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது குடும்பத்தில் பல உறுப்பினர்களும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய தினங்களில் நீலும் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரி மற்றும் நிலச்சரிவு காரணமாக குறைந்தது 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

இமயமலை பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு அண்மைய வரலாற்றில் மிக மோசமானதாக உள்ளது. இதில் இந்திய நிர்வாக ஹாஷ்மிர் பகுதி மற்றும் ஆப்கானிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளன.

Fri, 01/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை