13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டி விமானப் படை வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு

கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணித் தலைவர் விமானப் படை வீரர் ஜயசிங்கவுக்கு விமானப் படைத் தளபதி எயார் மார்சல் சுமங்கல டயஸினால் கௌரவிக்கப்படும் நிகழ்வு. 

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை விமானப் படையின் விளையாட்டு வீர, வீராங்கனைகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு விமானப்படைத் தளபதி எயார்மார்சல் சுமங்கல டயஸின் தலைமையில் டிசம்பர் 30ம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெற்ற 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் விளையாட்டு வீரர் விராங்கணைகள் 251 பதக்கங்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

40 தங்கப் பதக்கங்கள், 83 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 128 வெண்கலப் பதக்கங்களே இவ்வாறு இலங்கை வீர, விராங்கனைகளால் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதில் இலங்கை விமானப் படை வீர, வீராங்கனைகள் இலங்கை பெற்றுக் கொண்ட 251 பதக்கங்களில் 41 பதக்கங்களை வெற்றி கொண்டதோடு, இவற்றுள் ஐந்து தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களுமே இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டி மைதானத்தில் இலங்கையின் பெயரின் முன்னால் பதியப்பட்ட மொத்த பதக்கங்களுள் 41 பதக்கங்களுக்குச் சொந்தக்காரர்களான இலங்கை விமானப் படையின் விளையாட்டு வீர, வீராங்கனைகள் 52 பேர் தமது தாய் நாட்டிற்கும், விமானப் படைக்கும் புகழைப் பெற்றுத் தந்தமைக்காக அவர்களைக் கௌரவிப்பதற்காகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது விமானப் படைத் தளபதி எயார் மர்சல் சுமங்கல டயஸினால் அனைத்து விளையாட்டு வீர , வீராங்கனைகளின் திறமையினைப் பாராட்டி அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

(புத்தளம் விசேட நிருபர்)

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை