12 ஆவது வருடமாக அனுசரணை வழங்கும் பிறிமா சன்ரைஸ் பாண் உற்பத்திகள்

'ஸ்ரீலங்கா ஜூனியர் ஓபன் கொல்ப் சம்பியன்ஷிப்'போட்டிகளை ரோயல் கல்லூரி கொல்ப் கழகத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொல்ப் நாட்காட்டியில் மிகவும் முக்கிய நிகழ்வாக திகழும் 'இலங்கை கனிஷ்ட திறந்த சுற்றுப் போட்டிகளுக்கு 'பிறிமா குறூப் ஸ்ரீலங்கா நிறுவனமானது 'சன்ரைஸ்' எனும் தனது முதற்தர பாண் உற்பத்தியின் ஊடாக இம்முறையும் தொடர்ச்சியாக அனுசரணை வழங்குகின்றது. பெருந்தன்மையுடனான இந்த அனுசரணையானது இலங்கை திறந்த போட்டிகளையும் கடந்து, 2020ஆம் ஆண்டிலும் பிராந்திய ரீதியான பல்வேறு திறந்த போட்டிகளுக்கான அனுசரணை வழங்குவது வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கனிஷ்ட வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் அதேபோன்று கனிஷ்ட தேசிய மட்ட மற்றும் பிராந்திய மட்டங்களிலான போட்டிகளில் திறம்படபோட்டியிடுவதற்கான ஆற்றலை அவர்களுக்கு வழங்குவதற்காகவும் பிறிமா குறூப் ஸ்ரீலங்கா நிறுவனம் மற்றும் கொல்ப் விளையாட்டுத் துறையின் தேசிய அமைப்பான 'ஸ்ரீலங்கா கொல்ப்' ஆகியவை பங்காளியாக இணைந்துள்ளன.

இது உயரிய அனுகூலங்களைப் பெற்றுத் தந்துள்ளதுடன், நாட்டில் இவ் விளையாட்டின் தராதரத்தை மேம்படுத்துவதற்கும் உதவியிருக்கின்றது. உலகளாவியரீதியில் மிகவேகமாக வளர்ச்சியடைந்துவரும் அதேநேரத்தில்,'திறமையின் விளையாட்டாகவும் 'கருதப்படும் கொல்ப் போட்டிகளில் இலங்கையானது பல தடவைபோட்டிகரதிறமையைவெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி,அண்மையில் நேபாளத்தில் நடைபெற்று முடிந்த தென்னாசிய விளையாட்டுப் போட்டியிலும் கூட இலங்கை மகளிர் அணியானது தங்கப் பதக்கங்களை வென்றெடுத்துள்ளது.

இப்போட்டிகனிஷ்ட வீரர்களுக்கான தீர்க்கமான பலப்பரீட்சையாக அமைவதுடன்,ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளினதும் வெற்றியாளர் தேசிய கனிஷ்ட சம்பியனாக முடிசூடிக் கொள்வார்.

இந்த அடிப்படையில்,இலங்கை கனிஷ்ட திறந்தபோட்டித் தொடரானது,கனிஷ்ட கொல்ப் விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் தரப்படுத்துவதற்கான ஒரு அளவுகோலாக வளர்ச்சியடைந்துள்ளது.இச் சுற்றுப்போட்டி நான்குவகையான வயதுப் பிரிவுகளின் கீழ் நடைபெறும். அதாவது, 15 – 18 வயது (தங்கப் பிரிவு), 12 – 14 வயது (வெள்ளிப் பிரிவு), 10 – 11 வயது (வெண்கலப் பிரிவு), 9 வயது மற்றும் அதற்குகீழ்ப்பட்டவயதுப் பிரிவு (செம்புபிரிவு) ஆகியஅடிப்படையில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கனிஷ்ட கொல்ப் போட்டிகளுக்கு பிறிமா நிறுவனம் வழங்கும் அர்ப்பணிப்புமிக்க அனுசரணையானது, இவ்விளையாட்டை நாடெங்கும் ஊக்குவிக்கும் விடயத்தில் இலங்கை கொல்ப் சங்கத்திற்கு மிகவும் விலை மதிப்பற்றதாகும்.

இவ்வருடத்தில் கண்டி,அனுராதபுரம் மற்றும் நுவரெலியா போன்ற பிராந்தியங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பங்குபற்றுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. அடிமட்டத்தில் கொல்ப் விளையாட்டை பிரசித்தப்படுத்துவதற்காக இலங்கை கொல்ப் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் பயனாக இவ் விளையாட்டின் பிரபல்யம் மிகவேகமாக அதிகரித்து வருகின்றது. இலங்கையின் கொல்ப் விளையாட்டுதிறமையுள்ள இளையோர்களை அடையாளம் காணும் முகமாக இலங்கை கொல்ப் சங்கத்தின் கனிஷ்ட உப குழுவின் எண்ணத்தில் உருவான ஒரு முன்னெடுப்பாக இது திகழ்கின்றது. அவ்வாறுதிறமையுள்ள இளைஞர்களை எதிர்கால தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போட்டிகளுக்காக வளர்த்தெடுக்கும் நோக்கின் அடிப்படையிலேயே இந்தமுன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

கனிஷ்ட ஆடவர் கொல்ப் போட்டியில் அண்மையில் வெற்றிவாகை சூடி,நடப்பு சம்பியனாக பரிணமிக்கும் வினோத் வீரசிங்கதற்போது ஐக்கிய அமெரிக்காவில் பயிற்சி எடுத்துவருவதால்,அவரால் தனதுவெற்றிப் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த மதிப்புமிக்க வெற்றியை மூன்று தடவைபெற்றுக் கொண்ட முன்னணி கனிஷ்ட வீரராக வினோத் திகழ்கின்றார். அவர் இவ்வருடசுற்றுப் போட்டியில் பங்குபெறாமையானது, எஸ்.துவர்சன் (நுவரெலியா),அரூன் அஸ்லம் (கண்டி),கொழும்பு சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த நிரேக் தேஜ்வானி மற்றும் யானிக் குமார போன்ற இளம் திறமையாளர்களுக்கு இப்போட்டி ஒருகளத்தை திறந்து கொடுப்பதாக அமையும்.

கடந்த வருடகனிஷ்ட மகளிர் பிரிவு வெற்றியாளரான தானியா மினெல் பாலசூரிய மீண்டும் ஒருமுறைதனது வெற்றிப் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக களமிறங்குவார் என்றாலும்,மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 16 வயதான வளர்ந்து வரும் வீராங்கனையான கய்லா பெரேராஅவருக்கு கடுமையான சவாலாக விளங்குவார். இவ்விருவருக்கும் இடையிலான இறுதிப் போட்டிநாளில் மகளிர் வெற்றிப் பட்டத்திற்காகநாணயச் சுழற்சி இடம்பெறக் கூடும். இவ்விரு ஆற்றல் மிக்க இளம் வீராங்கனைகளிலும் யார் மனநிலையை சீராகவைத்துக் கொள்கின்றார்,யாரால் தனது நரம்பை அழுத்த சூழ்நிலையில் திடமாக பேணிக் கொள்ள முடிகின்றது என்பதிலேயே அந்தவெற்றி வாய்ப்பு பெரிதும் தங்கியுள்ளது.

கோட்ட மட்ட கனிஷ்ட பிரிவுகளின் கீழ் அல்கம சகோதரர்களான ரேஷன் மற்றும் கேசவ் ஆகியோரை நம்பிக்கை நட்சத்திரங்களாக நாம் காணக் கூடியதாக இருக்கலாம். எவ்வாறாயினும்,நுவரெலியாவைச் சேர்ந்தவர்களான தேஜஸ் ரதிஷ் காந்த்,சீ. தரணியன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த போட்டியாளர்களான கே. தனூசன்,சனால் பினுஷ்க ஆகியோர் பலமான போட்டியாளர்களாக திகழக் கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.

2020 ஜூலை மாதத்தில் இடம்பெறவுள்ள பிரித்தானிய கனிஷ்ட திறந்தபோட்டியில் பங்குபற்றுவதற்காக,1 ஆண் மற்றும் 1 பெண் வீரவீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான புகுமுகத் தேர்வுச் சுற்றுக்களாக - இவ்வருட சம்பியன்ஷிப் தொடரின் மூன்றுசுற்றுப் போட்டிகள் பயன்படுத்தப்படும்.

இந்த சுற்றுப் போட்டிக்கான பிரதான அனுசரணையாளராக திகழும் பிறிமாசன்ரைஸ் பாண் உற்பத்திகள்,இச் சுற்றுப்போட்டி இடம்பெறும் வேளையில் வீரர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நடவடிக்கயை மேற்கொள்ளும். இச் சுற்றுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வை எதிர்வரும் 8ஆம் திகதி பி.ப. 4.00 மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அனுசரணைக்கான காசோலையை பிறிமா குழும பொதுமுகாமையாளர் டன் பென் சுவான் மற்றும் பிறிமாசன்ரைஸ் பாண் உற்பத்திகளின் விற்பனை மேம்படுத்துனர்களான சிலோன் அக்ரோ இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் பொது முகாமையாள் சுன் டைன் சிங் மற்றும் அதன் பிரதிப் பொதுமுகாமையாளர் சஜித் குணரத்னஆகியோரினால் கையளிக்கப்படு வதைப் படத்தில் காணலாம். இலங்கை கொல்ப் சங்கத்தின் பிரதிநிதியாக கனிஷ்ட உப குழுவின் தலைவர் திருமதி நிலூ ஜயத்திலக்க,அதன் பொருளாளர் சுதத் கெடவகந்த மற்றும் செயலாளர் நிசான் நவரத்ன ஆகியோர் இதன்போது கலந்து கொண்டனர்.

Thu, 01/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை