11ஆவது பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி

12000 மாணவர்கள் பங்கேற்பு

சமபோஷ 11 ஆவது பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டியில் 33 ஆண்கள் அணிகள், 25 பெண்கள் அணிகள் மாவட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு,காலியில் இடம்பெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பதாக இவை போட்டியிடும்.காலி,உதைபந்தாட் மைதானத்தில் ஆரம்பநிகழ்வு 2ம் திகதி முதல் 4 திகதி வரை இடம்பெறும். போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 5ம் திகதி இடம்பெறும். போட்டித் தொடரின் சிறந்த வீரர்,சிறந்த வீராங்கனை மற்றும் சிறந்தகோல் காப்பாளர் போன்ற விருதுகளும் வழங்கப்படும்.

வருடாந்தம் இடம்பெறும் பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கு சமபோஷ தொடர்ச்சியாக பதினோரவது ஆண்டாகவும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் இலங்கைபாடசாலைகள் உதைப்பந்தாட்டசம்மேளனம் ஆகியன இணைந்துஏற்பாடுசெய்யப்படும் சமபோஷ 14 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான சம்பியன்ஷிப் 2019 போட்டிகள், 2020 ஜனவரி 13 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.

இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் மொத்தமாக 12000 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தமாக 470 ஆண்கள் அணிகளும், 130 பெண்கள் அணிகளும் போட்டியிடும் இந்த சம்பியன்ஷிப் போட்டிகள்,நாடு முழுவதிலும் சகல மாவட்டங்களையும் உள்வாங்கி 32 நிலையங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஹேமந்த அபேகோன் கருத்துத் தெரிவிக்கையில்,'ஒவ்வொரு வருடத்திலும் இளைஞர்கள் மத்தியில் இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆர்வம் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்தபோட்டித் தொடரினூடாக அணியினரின் குழுநிலைச் செயற்பாடுஊக்குவிக்கப்படுவதுடன்,விளையாட்டினூடாகஅவர்களின் உடல் மற்றும் உளரீதியான வளர்ச்சிஊக்குவிக்கப்படுவதுடன், இந்தபோட்டித் தொடருக்குவருடாந்தம் அனுசரணை வழங்குவதையிட்டு சமபோஷவுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கின்றேன்.'என்றார்.

பிளென்டி ஃபுட்ஸ் பிரைவட் லிமிடெட் பிரதம நிறைவேற்றுஅதிகாரியும் பணிப்பாளருமான ஷம்மி கருணாரட்னகருத்துத் தெரிவிக்கையில்,'இளம் பிள்ளைகள் மத்தியில் அபிவிருத்திக்கு சிறந்த நலச்செழுமை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. உடல் ரீதியானமற்றும் உளரீதியான அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பில் நாம் உறுதியான நம்பிக்கைகொண்டுள்ளோம். ஒற்றுமை, ஒழுக்கம்,துரித தீர்மானமெடுக்கும் ஆற்றல் போன்றவற்றுடன் வலிமைமற்றும் உத்வேகம் போன்றன விளையாட்டினூடாக ஊக்குவிக்கப்படுகின்றது. சிறுவர்கள் மத்தியில் இந்த இலக்குகளை எய்துவதற்கு சிறுவர்களின் தினசரி ஆகாரத்தில் சமபலபோஷாக்கு காணப்படவேண்டும். ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலதலை முறைக்கு சமபல போஷாக்கு நிறைந்த காலைஆகாரம் தொடர்பானதகவலைசமபோஷ வலியுறுத்துகின்றது.'என்றார்.

முன்னணி பிஸ்கட்,சொக்லட்,சீரியல் மற்றும் இனிப்புபண்டங்கள் உற்பத்தியாளரான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் குழுமத்தின் துணை நிறுவனமானபிளென்டி ஃபுட்ஸ் பிரைவட் லிமிடெடின் முன்னணி வர்த்தகநாம மாகசமபோஷ திகழ்கின்றது. நிறுவனம் இயங்கும் சகல துறைகளிலும் சந்தை முன்னோடியாக திகழ்கின்றது.பலஆண்டுகளாக நாடு முழுவதிலும் முன்னெடுத்து வரும் சமூகப் பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளுக்காக சகலதரப்பினரிடமிருந்து நன்மதிப்பை வென்ற உள்நாட்டு கூட்டாண்மை நிறுவனமாக சிபிஎல் குரூப் திகழ்கின்றது.

பரீத் ஏ றகுமான்

Fri, 01/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை