100 ஒளியாண்டு தூரத்தில் பூமியின் அளவான கிரகம்

உயிர்வாழ சாத்தியம் கொண்ட தூரத்தில் தனது நட்சத்திரத்தை வலம் வரும் பூமியின் அளவான வேற்றுக் கிரகம் ஒன்றை நாசாவின் டெஸ் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.

‘டீ.ஓ.ஐ 700 டி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கிரகம் ஒப்பீட்டளவில் பூமிக்கு மிக நெருக்கமாக 100 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாக நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகம் அறிவித்துள்ளது.

“அருகாமை நட்சத்திரங்களில் உள்ள குறிப்பாக பூமியின் அளவான கிரகங்களை கண்டுபிடிப்பதற்காகவே டெஸ் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது” என்று நாசா வானியற் பெளதீகவியல் பிரிவு பணிப்பாளர் போல் ஹேர்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

எமது சூரியனில் 40 வீதம் மாத்திரமே அளவு கொண்ட ஒரு குள்ள நட்சத்திரத்தையே இந்த கிரகம் வலம் வருகிறது. தனது நட்சத்திரத்தை 37 பூமி நாட்களுக்கு ஒரு தடவை வலம் வரும் இந்தக் கிரகம் எமது சூரியன் பூமிக்கு அளிக்கும் சக்தியில் 86 வீதத்தை தனது நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது.

எனினும் கிரகத்தின் ஒரு பக்கம் எப்போதும் பகல் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை