MDS அபேரத்னவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடத்திற்கு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பின் 107 (1) மற்றும் 41அ (1) சரத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி முன்வைத்துள்ள பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகரித்தது.

அரசியலமைப்பு பேரவை சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நடைபெற்றது. இதில் 9பேரவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டாலும் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டாத நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முதன்முறையாக அரசியலமைப்பு ​பேரவை நேற்று கூடியது. இதில் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளே அழைக்கப்பட்டிருந்தார்கள். எதிர்வரும் வாரங்களில் இதிலுள்ள அங்கத்தவர்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிய வருகிறது.

Fri, 12/13/2019 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை