LECO நிறுவனம் இவ்வருடம் 250 கோடி ரூபாய் இலாபம்

மின்சார சபை ரூ 8,500 கோடி நட்டம்  

மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் கீழ் இயங்கும் LECO நிறுவனம் இந்த வருடத்தில் 250 கோடி ரூபாவை இலாபமாகப் பெற்றுக் கொண்டுள்ளது.  

இலங்கை மின்சார சபை இந்த வருடத்தில் 8,500 கோடி ரூபா நட்டமடைந்துள்ளதுடன் LECO நிறுவனம் 250 கோடியை இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளது.  

 LECO நிறுவனம் தமது செயற்பாடுகளை மேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சில மாவட்டங்களிலேயே முன்னெடுத்து வருகிறது அதற்கு 5,65,851 பாவனையாளர்கள் உள்ளனர்.  

அந்த நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் 1,546 ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர்.  

எனினும் மேற்படி நிறுவனத்தால் இந்த ஆண்டு 30.94 பில்லியன் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதில் 2,969 பில்லியன் இலாபமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

LECO நிறுவனம் எதிர்வரும் வருடங்களில் புதிய தொழில்நுட்பங்களுடனான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.  

டிஜிட்டல் முகாமைத்துவம், வலையமைப்பு விரிவாக்கல் உள்ளிட்ட செயற்பாடுகள் அதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.  

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்படி நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டப்பட்ட கலந்துரையாடலிலேயே இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. (ஸ)    

லோரன்ஸ் செல்வநாயகம்    

Thu, 12/19/2019 - 13:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை