அச்சமின்றி தீர்மானம் எடுக்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் FCID க்கு அனுப்பப்பட மாட்டார்கள்

பொதுமக்களுக்காக அச்சமின்றி தீர்மானம் எடுக்கும் எந்தவொரு அதிகாரிகளும் இனிமேல் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்குச் அனுப்பப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மக்களின் நலனுக்காகவே சட்டங்கள் உள்ளன. அதனால் பொதுமக்களின் நலுனுக்காக தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. இதனால் எதிர்காலத்தில் அதிகாரிகள் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படாதென்றும் குறிப்பிட்டார்.

மாத்தறை மாவட்ட இணைப்பாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுற்றாடலை பாதுகாப்பதாக எமக்கு வாக்குறுதியளித்துள்ளார். இதற்குப் பின்னர் எவராலும் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

கடந்த காலத்தில் அரசாங்கமும் பிரதேச சபையும் வெவ்வேறு கட்சிகளிடமிருந்ததனால் தான் வேலைகள் தாமதமாயின. இதற்கான நிதி உரிய நேரத்துக்கு கிடைக்காமல் போயின. இவை ஒவ்வொன்றுக்கும் காரணங்கள் உள்ளன. அதனால்தான் அதிகாரிகளை சரியான தீர்மானம் எடுக்குமாறு கூறுகின்றேன்.

மாகாண கல்வி அமைச்சர்களுக்கு கடந்த அரசாங்கத்தில் கல்வியமைச்சரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டவேயில்லை.

நாம் அந்நிலைமையை மாற்றுவோம். கல்வி தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளும்போதும் கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் மாகாண அமைச்சர்களுடன் இணைந்தே தீர்மானம் மேற்கொள்ளுவேன் என்றார்.

Sat, 12/07/2019 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை