ஜனாதிபதியின் தூய்மையான நகர திட்டம்; மட்டுநகரில் பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்பு திட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவான தூய்மையான நகரம் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை விலைகொடுத்து வாங்கும் திட்டத்தினை முதன்முறையாக மட்டக்களப்பு மாநகர சபை நேற்று ஆரம்பித்துள்ளது.

தெருக்களில் வீசப்படும் தண்ணீர் மற்றும் குளிர்ப்பான வெற்று போத்தல்களை மட்டக்களப்பு மாநகர சபை கொள்வனவு செய்து புள்ளி திட்டமொன்றின் அடிப்படையில் சேகரிப்பாளர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகிறது. இதனால் தெருக்களிலும் முக்கிய இடங்களிலும் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீங்கிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

கொள்வனவு செய்யப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள் மீள்சுழற்சிக்காக கொழும்பிலுள்ள நிறுவன மொன்றிற்கு வழங்கப்படுவதாக மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.

இத்திட்டத்தினூடான முதலாவது பிளாஸ்டிக் போத்தல்களை கொள்வனவு செய்யும் நிலையம் மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவனினால் நேற்று மட்டக்களப்பு திருப்பெருந்துறையில் திறந்து வைக்கப்பட்டது.மாநகர பிரதி மேயர் சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Sat, 12/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை