ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய கின்னஸ் சாதனை!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய கின்னஸ் சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

145 நாடுகளை சேர்ந்த பயணிகள் ஒரே விமானத்தில் பயணித்தே இவ்வாறு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்த ஆண்டு சகிப்புத்தன்மைக்கான ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது.

இந்தநிலையில் 48-வது தேசிய தினத்தை முன்னிட்டு, எமிரேட்ஸ் நிறுவனம் வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்களை கொண்ட 541 பேரை தெரிவு செய்து, ஒரே விமானத்தில் பயணிக்க செய்துள்ளது. சகிப்புதன்மையை வலியுறுத்தும் ஒளிப்படங்கள் வரையப்பட்ட குறித்த விமானம், ஒன்றரை மணி நேரம் பறந்துள்ளது.

Mon, 12/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை