தங்கப்பதக்கம் பெற்ற தரிந்து நாமல் அநுராதாவிற்கு அம்பாறையில் வரவேற்பு

நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் வூஷு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தரிந்து நாமல் அநுராதாவிற்கு (10) அம்பாறையில் பெருவரவேற்பு வழங்கப்பட்டது.

தெற்காசிய விளையாட்டு விழாவில் வூஷு விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற தரிந்து நாமலை அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க வரவேற்று நிகழ்வினை ஆரம்பித்தார்.

இதன்போது வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க , நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி சிறியானி விஜேவிக்ரம, தயா கமகே, எம்சீ.பைசல் காசிம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கை கடற்படை அதிகாரியான தரிந்து நாமல் தெற்காசிய விளையாட்டு விழாவில் வூஷு விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காகவே இப்பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்றல்கேம்ப் குறூப் நிருபர்

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை