அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த சர்வதேச சதி

சுவிஸ் தூதரக பெண் விவகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆளும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது. இச் சந்திப்பு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரமானது சோடிக்கப்பட்டது என்பதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஆரம்பத்திலேயே சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும். குறித்த குற்றச்சாட்டு பொய்யானதென நிரூபிப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எம்மிடமுள்ளன. இந்த சம்பவத்தின் பின்புலத்தில் யார் உள்ளனரென கண்டறியப்பட வேண்டும். அதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

Thu, 12/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை